“சாட்சியமாகும் உயிர்கள்” எனும் இலங்கை முஸ்லிம்களின் யுத்த ஆவணம் தமிழகத்தில் நாளை 2 ஆம் திகதி மாலை 5 மணிக்கு வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
இலங்கை – அக்கரைப்பற்றைச் சேர்ந்த மனித உரிமைகள் மற்றும் சமூக – அரசியல் செயற்பாட்டாளர் சர்ஜூன் ஜமால்தீன் – இந்த நூலின் ஆசிரியர் ஆவார்.
இலங்கையில் இடம்பெற்ற 30 வருட யுத்த காலப் பகுதியில் காணாமலாக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த முஸ்லிம்கள் தொடர்பிலும் – அது தொடர்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் – இராஜதந்திரிகள் மற்றும் முக்கியமான தமிழீழ இயக்கங்களின் முக்கியஸ்தர்கள்
பலருடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களை உள்ளடக்கியதாகவும் 800 பக்கங்களில் இந்நூல் வெளியாகியுள்ளது.
நூலின் சிறப்பம்சம் யுத்த பிரதேசங்களுக்கு நேரடியாக கள விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து தரவுகள் பெறப்பட்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளமை ஆகும்.
எதிர்வரும் நவம்பர் மாதம் உத்தியோகபூர்வமாக இந்நூல் இலங்கையிலும் இந்தியாவிலும் வெளியிடப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில், இந்நூல் தொடர்பான விமர்சன அரங்கு நாளை இரண்டாம் தேதி மாலை 5 மணிக்கு சமூக ஊடகமான zoom வாயிலாக இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய பேராசிரியர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரபல எழுத்தாளர்கள் என பல் தரப்பினர் பங்கு கொள்ள உள்ளனர்.
இந்நிகழ்வில் நீங்களும் பங்கு கொள்ள விரும்பினால் கீழுள்ள zoom சமூக வாயில் ஊடாக பங்கு கொள்ள முடியும்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட எழுத்தாளர் ஏபிஎம். இத்ரீஸ் அவர்களால் தொகுக்கப்பட்ட “என்ட அல்லாஹ்” என்ற சிறுகதை நூல் தொடர்பான விமர்சன அரங்கமும் இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Buy the Book Online: https://www.commonfolks.in/books/d/saatchiyamaagum-uyirgal?srsltid=AfmBOorQUIDqtnyEiLfHyCuDkrQjnamYUoAHiHwjflR67LgCB6p98H1i