”எனது பதவியின் காரணமாக,உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் தொடர்பான முக்கியமான மற்றும் இரகசியமான தகவல்களைப் பெற்றிருந்தேன்.
சனல்- 4 ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டவுடன் எனது அச்சத்தை அதிகப்படுத்தும் வகையில்பொலிஸ் எனது தாயையும் சகோதரியையும் சந்தித்தது., எனது தொலைபேசி இலக்கம் மற்றும் எனது முகவரியைக் கண்டறியும் முயற்சியில் இரண்டு தெரியாத நபர்கள் எனது சகோதரியின் மகனிடம் சோதனை செய்தனர்.”
டி . பி . எஸ் . ஜெயராஜ்
ச னல் 4 இல் விசில்ப்ளோயர்[சட்டவிரோதமான அல்லது ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபடுவதாகக் கருதப்படும் ஒரு நபர் அல்லது அமைப்பு குறித்து தெரிவிக்கும்ஆள்] ஹன்சீர் அ சாத் மௌலானா யார் என்ற தலைப்பில் கட்டுரையின் முதல் பகுதி. கடந்த வாரம் இந்த பத்திகளில் வெளியிடப்பட்டது. கட்டுரையின் இரண்டாம் பாகத்தை நான் எழுதும் போது, ஜெனீவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ச னல் 4 தொலைக்காட்சி ஆவணப்படம் மற்றும்முக்கிய விசில்ப்ளோயர் ஹன்சீர் அ சாத் மௌலானா தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கையின் உயிர்த்த குண்டுவெடிப்புகள் என்ற தலைப்பில், செப்டம்பர் 5 அன்று ச னல் 4 அனுப்பிய ஆவணப்படம், செப்டம்பர் 21, வியாழன் மாலை சர்வதேச மனித உரிமைகள் பேரவையினால் திரையிடப்பட்டது.
இடம் ஆக்டாகன் வளாகம் 2, செமின் டு பெவில்லன் 1218 கிராண்ட் சகோன். ஜெனிவா டைம்ஸ் அனுசரணை மூலம் திரையிடபட்டது .
சுருக்கமான அறிமுகத்திற்குப் பிறகு தொடங்கிய திரையிடலில் ஆவணப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தோம் வாக்கர் மற்றும் நிர்வாகத் தயாரிப்பாளர் பென் டி பியர் ஆகியோர் கலந்து கொண்டனர்
திரையிடலுக்குப் பிறகு கலந்துரையாடல் நடந்தது. கலந்துரையாடலுக்கு முன்னதாக, ஹன்சீர் அ சாத் மௌலானாவினால் வெளியிடப்பட்ட விரிவான அறிக்கையின் பிரதிகள் அங்கிருந்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. ஆஜராகாத அ சாத் மௌலானா ஒளிநாடா இணைப்பு மூலம் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஹன்சீர் அ சாத் மௌலானா வெளியிட்ட அறிக்கையானது , ஆவணப்படத்தில் அவர் தெரிவித்த கருத்துகளின் தெளிவுபடுத்தல் மற்றும் விரிவாக்கம் ஆகும். படத்தில் அவர் வெளிப்படுத்திய தகவல்கள், அறிக்கையில் மேலும் விவரங்களை வழங்குவதன் மூலம் முன்னோக்கி வைக்கப்பட்டன.
எவ்வாறாயினும், அ சாத் மௌலானாவினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட இரண்டு முக்கிய நபர்களானஎஸ் எ எஸ் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் ஆகிய இருவரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து தப்பிச் சென்று உயிருக்கு பயந்து வெளிநாட்டில் தஞ்சம் புகுந்ததாக ஹன்சீர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடத்தல் அல்லது படுகொலைக்கு பயப்படுவதாக அவர் கூறுகிறார். இலங்கையில் உள்ள தனது தாயும் சகோதரியும் துன்புறுத்தப்படுவதாகவும் ஹன்சீர் குற்றஞ்சாட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் தன்னையும் தன் குடும்பத்தினரையும் தாக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹன்சீர் அ சாத் மௌலானா, தான் பல தாக்குதல்கள், படுகொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு சாட்சியாக இருப்பதாகவும், சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு முன் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்.
அதன் தற்போதைய பொருத்தப்பாடு மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அ சாத் மௌலானாவின் அறிக்கையை இந்த வாரம் வெளியிடுகிறேன்.
ஹன்சீர் அ சாத் மௌலானாவின் அறிக்கை வருமாறு ;
“பிரிட்டிஷ் ச னல் 4 மூலம் செப்டம்பர் 5 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட இலங்கையின் உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் என்ற ஆவணப்படம் இலங்கையில் கணிசமான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. பல்வேறு கட்டுரைகள் மற்றும் தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன, மேலும் இந்த ஆவணப்படம் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு சில ஆதரவை உருவாக்கியுள்ளது, நிறைய வதந்திகள் மற்றும் போலி செய்திகள் வெளியிடப்பட்டன, என் மனைவி மற்றும் பிள்ளைகளை கூட அவதூறாகப் பேசி அவர்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எனவே நான் பின்வரும் அறிக்கையை வெளியிட விரும்புகிறேன். ”
2006ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நான் பாரா ளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனிடமும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி எம் வி பி ) என்ற அரசியல் கட்சியின் தலைவருமான பிள்ளையானிடம் பணியாற்றியுள்ளேன். அது முன்பு ஒரு போராளிக் குழுவாக இருந்தது. நான் ரி எம்விபியின் பிரசாரச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருந்தேன். நான் ஒரு போராளி அல்ல. உண்மையில், நான் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி பெற்றதில்லை.
எனது நிலைப்பாட்டின் காரணமாக, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் தொடர்பான முக்கியமான மற்றும் இரகசியத் தகவல்களைப் பெற்றேன்.
21 ஏப்ரல் 2019 உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 45 பிள்ளைகள் , 40 வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலுக்குப் பிறகு தற்கொலைக் குண்டுதாரிகளின் அடையாளத்தை ஊடகங்கள் வெளிப்படுத்தியபோதுதான், இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் மற்றும் ஏனைய குற்றவாளிகள் பற்றிய வலுவான ஆதாரங்கள் என்னிடம் இருப்பதை உணர்ந்தேன். இந்த பயங்கரமான மற்றும் அழிவுகரமான தாக்குதல்களைத் தயாரிப்பதில் அல்லது நடத்துவதில் நான் எந்த வகையிலும் ஈடுபடவில்லை.
2015ஆம் ஆண்டு மகி ந்த ராஜபக்ஷ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார். மட்டக்களப்பு புனித மரியாள் தேவா லயத்தில் 2005 ஆம் ஆண்டுநத்தார் தினம்.
பிள்ளையானின் செயலாளர் என்ற வகையில், அவரது சட்டத்தரணிகளுடன் சேர்ந்து, பிள்ளையானைச் சந்தித்து சட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாட நீதிமன்றம் எனக்கு அனுமதி வழங்கியிருந்தது.
2017 செப்டெம்பர் மாதம் சென்ற போது, காத்தான்குடியைச் சேர்ந்த சில முஸ்லிம் கைதிகள் தன்னுடன் அதே அறையில் இருப்பதாக பிள்ளையான் என்னிடம் கூறினார். காத்தான்குடியில் மற்றுமொரு முஸ்லிம் குழுவை தாக்கியமை மற்றும் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் தந்தை, அவரது மகன் மற்றும் ஆறு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேசிய தவ்ஹீத் ஜமாத் (என் ரி ஜே ) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
பிள்ளையானின் வேண்டுகோளுக்கிணங்க நான் சைனி மௌலவியை சந்தித்தேன். பின்னர், இந்தக் கைதிகளின் உறவினர்களுக்கு பிணை எடு ப்பதற்கு நிதியை ஏற்பாடு செய்ய இராணுவப் புலனாய்வுப் பிரிவை (எம். ஐ ) தொடர்பு கொள்ளுமாறு பிள்ளையான் என்னிடம் கேட்டார். அவர்கள் 24 அக்டோபர் 2017 அன்று விடுவிக்கப்பட்டனர்.2018 ஜனவரி இறுதியில், அப்போது பிரிகேடியராக இருந்த சுரேஷ் சாலே க்கும் சைனி மௌலவியின் குழுவினருக்கும் இடையே ஒருஇ ரகசிய சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு பிள்ளையான் என்னிடம் கூறினார். சந்திக்கும் இடம் மற்றும் நேரம் குறித்து சுரேஷ் சா லே எனக்கு அறிவிப்பார் என்று பிள்ளையான் கூறினார்.
சில நாட்களுக்குப் பிறகு சுரேஷ் சாலே என்னைத் தொடர்பு கொண்டு சைனி மௌலவியை புத்தளம் வனாத்தவில்லு பகுதிக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் நான் கொழும்பில் இருந்து புத்தளத்திற்கு எம்.ஐ அதிகாரி ஒருவருடன் பயணித்த போது சைனி மௌலவியின் குழுவினர் குருநாகலிலிருந்து வந்தனர். இந்தக் கூட்டத்திற்கு எனது சொந்த வாகனத்தையோ அல்லது சாரதியையோ பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்திய பிள்ளையான், போக்குவரத்து வசதியை எம்.ஐ.செய்து தரும் என்று கூறியிருந்தார்
இந்த சந்திப்பு 2018 பெப்ரவரி மாத தொடக்கத்தில் புத்தளத்திற்கு வெளியே அமைந்துள்ள 50 முதல் 60 ஏக்கர் பரப்பளவில்உள்ள பெரிய தென்னந்தோப்பில் நடைபெற்றது. சுரேஷ் சா லே ஒரு சாரதியுடன் சாம்பல் நிற டொயோட்டா காரில் வந்தார். சைனி மௌலவி 30 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு வெள்ளை வா னில் ஆறு பேர் கொண்ட குழுவுடன் வந்தார். சைனி மௌலவி தனது மூத்த சகோதரர் மௌலவி சஹ் ரானை குழுவின் தலைவராக அறிமுகப்படுத்தினார். இந்த சந்திப்பு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கூட்டத்தில் பங்கேற்காமல் வெளியில் காத்திருந்தேன்.
கூட்டம் முடிந்து மட்டக்களப்புக்குப் பயணித்த நான் மறுநாள் சந்திப்பு குறித்து பிள்ளையானிடம் தெரிவித்தேன். சுரேஷ் சாலே சஹ்ரானின் குழுவுடன் ரி எம் வி பி உடன் இருந்ததைப் போன்ற ஒரு பெரிய திட்டமும் ஒப்பந்தமும் வைத்திருந்ததாக பிள்ளையான் கூறினார்.
இந்தச் சந்திப்பு குறித்த தகவல்களை ரகசியமாக வைக்குமாறும், ஏதேனும் உதவி கேட்டால் உதவுமாறும் என்னிடம் கூறினார். 2017 செப்டம்பரில் சைனி மௌலவியை சிறையில் சந்தித்தது தவிர 2018பெ ப்ரவரி யில் சுரேஷ் சாலே யு டனான சந்திப்பின் போது நான் சஹ்ரானையும் அவரது குழுவையும் ஒரு முறை மட்டுமே சந்தித்தேன். இதைத் தவிர அவர்களுடன் எனக்கு எந்தத் தொடர்பும், உறவும் இல்லை. பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அவர்களின் பயங்கரவாத நோக்கமோ அல்லது திட்டமோ எனக்குத் தெரியாது.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையான 21 ஏப்ரல் 2019 அன்று, காலை 7 மணியளவில் சுரேஷ் சாலேஎன்னைத் தொடர்பு கொண்டு, கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு உடனடியாகச் சென்று, அங்கு காத்திருந்த ஒருவரை அழைத்து அந்த நபரின் தொலைபேசியை எடுக்கச் சொன்னார். நான் தற்போது மட்டக்களப்பில் இருப்பதாகவும் கொழும்பில் இல்லை என்றும் கூறினேன்.
இந்த உரையாடலுக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன. தாக்குதல்கள் நடந்த உடனேயே சிறைக்காவலர் ஊடாக பிள்ளையான் செய்தி அனுப்பி என்னை அவசரமாக சந்திக்குமாறு கூறினார். உயிர்த்த ஞாயிறு அன்று காலை 11 மணியளவில் அவரை சிறையில் பார்த்தபோதுஉயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயற் பட்டவர் சுரேஷ் சா லே என்றும், இதுபோன்ற தாக்குதல் நடக்கும் என்று தான் கருதியதாகவும் என்னிடம் கூறினார்.
அறிவதற்கு சைனி மௌலவியை அழைக்கச் சொன்னார், ஆயினும் அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.
பிள்ளையானின் வேண்டுகோளுக்கிணங்க நான் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப் படைத் தாக்குதல்தாரிகளே என்பதை மாலையில் ஊடகங்களில் வந்த செய்திகளின் மூலம்தான் உணர்ந்தேன். தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதலை நடத்தப் பணிக்கப்பட்ட குண்டுதாரி ஜமீல் என்று சுரேஷ் சாலி என்னைச் சந்திக்க விரும்பியவர் என்பதை ஜனாதிபதியின் விசாரணை ஆணைக்குழு மற்றும் சிஐடியின் விசாரணைகள் மூலம் அறிந்துகொண்டேன். கடைசி நிமிட திட்டத்தில் மாற்றம், தாஜ்ஜில் இருந்து வெளியேறி பின்னர் தெஹிவளையில் உள்ள சிறிய ஹோட்டலில் வெடிக்கவைத்திருந்தார்
பிள்ளையானும் ரி எம் வி பி யும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தா பய ராஜபக்சவுக்கு ஆதரவளித்தனர். கோத்தா பய ராஜபக்ச ஜனாதிபதியான பிறகு, சுரேஷ் சா லே இலங்கைக்குத் திரும்பினார் மற்றும் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று, அரச புலனாய்வு சேவையின் (எஸ் எ எஸ் ) பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், வாக்குறுதியளித்தபடி பிள்ளையானை விடுவிக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கவில்லை, ஏனெனில் முன்னாள் சட்டமா அதிபர் பிள்ளையானுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை மீளப்பெற மறுத்துள்ளார்.
2020 ஆகஸ்ட் 5 பொதுத் தேர்தலின் போது, அவர் சிறையில் இருந்தபோது, பிள்ளையான் பாரா ளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தலுக்குப் பிறகு, கோத்தா பய ராஜபக்சவும் தற்போதைய அரசாங்கமும் எப்படி ஆட்சிக்கு வந்தன என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும், பிள்ளையானை விடுவிக்காவிட்டால் பாரிய விலை கொடுக்க வேண்டிவரும் என எச்சரிக்கவும் என்னையும் அவரது சகோதரரையும் சுரேஷ் சாலே யை சந்திக்குமாறு பிள்ளையான் கேட்டுக் கொண்டார்.
சில நாட்களுக்குப் பின்னர் புதிய சட்டமா அதிபர் பிள்ளையானுக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஏற்பாடு செய்தவர்கள் பற்றிய எனது அறிவைத் தவிர, 2005 மற்றும் 2015 க்கு இடையில் நடந்த பல அரசியல் கொலைகள் மற்றும் கடத்தல்கள் பற்றிய விரிவான தகவல்கள் என்னிடம் உள்ளன.
இந்தக் கொலைகளில் பெருமளவிலானவை இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவில் இரகசியமாகச் செயற்படும் கொலைப் படையான திரிபோலி படைப்பிரிவினால் செய்யப்பட்டவை. இந்த பிரிவு ஆரம்பத்தில் மேஜர் பிரபாத் புலத்வத்த மற்றும் பின்னர் கேணல் ஷம்மி குமாரரத்ன தலைமையில் இருந்தது.
இது மேஜர் ஜெனரல் அமா ல் கருணாசேனவின் நேரடி கட்டளையின் கீழ் இருந்தது, அவர் அப்போது எம் ஐ யி ன் பணிப்பாளராக இருந்து பின்னர் இராணுவ தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த படைப்பிரிவு கோத்தா பய ராஜபக்சவிடம் நேரடியாக அறிக்கை அளித்து, அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அவரிடமிருந்து மட்டுமே உத்தரவுகளைப் பெற்றது.
இந்த படைப்பிரிவும், ரி எம் வி பி யும், போரின் போதும் அதற்குப் பின்னரும், ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள் உட்பட பல முக்கிய அரசியல் படுகொலைகளுக்குப் பொறுப்பாளிகள். குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் படுகொலைகள், ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க, சிவராம் மற்றும் நடேசன் படுகொலைகள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் மற்றும்கேலிச்சித்திர கலைஞர் பிரகீத் எ க்னா லிகொட காணாமல் போன சம்பவங்களுக்கும் இவர்களே பொறுப்பு.
எம். ஐ .மற்றும்ரி எம் வி பி . இணைந்து நடத்திய பல மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களும் என்னிடம் உள்ளன. அவர்கள் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், என் உயிருக்கு பயந்து அவர்களிடமிருந்து என்னால் விலக முடியவில்லை. இலங்கை அதிகாரிகள் என்னைக் கடத்திச் செல்வார்கள், சிறையில் அடைப்பார்கள் அல்லது கொலை செய்வார்கள் என்று இன்று வரை நான் அஞ்சுகிறேன்.
எனது அச்சத்தை அதிகப்படுத்தும் வகையில், சணல்-4ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டவுடன் பொலிஸ் என் தாயாரையும் சகோதரியையும் சந்தித்தது, மேலும் எனது தொலைபேசி எண் மற்றும் எனது முகவரியைக் கண்டறியும் முயற்சியில் இரண்டு அறியாத நபர்கள் எனது சகோதரியின் மகனுடன் சோதனை செய்தனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகிய இரண்டும் இந்தத் துயரச் சம்பவத்தின் மூளையாகச் செயற் பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய உண்மையை வெளிப்படுத்தத் தவறிவிட்டன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சி . ஐ .டி ) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர 18 பெப்ரவரி 2022 அன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவர் தலைமையிலான விசாரணைக் குழு தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான தொடர்புகளுக்கான முக்கிய ஆதாரங்களைக் கண்டறிந்தது. அவர்களின் விசாரணையை தொடர விடாமல் இ ராணுவம் தடுத்தது.
நான் அறிந்திருந்தவை காரணமாக, இலங்கை அரசாங்கத்தின் உளவுத்துறையால் நான் கடுமையாக அச்சுறுத்தப்பட்டேன். நான் எனது உயிரைக் காப்பாற்ற அரசியல் தஞ்சம் கோரி ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்றேன்.
இலங்கையில் பல பயங்கரவாத தாக்குதல்கள், அரசியல் படுகொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு திட்டமிடப்பட்டதற்கு சாட்சியாக, இந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சாட்சியமளிக்க நான் தயாராக இருக்கிறேன். எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள அதிகாரிகளுக்கு உண்மையை வெளிப்படுத்துவதில் ஆர்வம் இருப்பதாக நான் நம்பவில்லை. எனவே சர்வதேச சுயாதீன விசாரணைக்கு மட்டுமே சாட்சியம் அளிப்பேன்.