கல்முனையில் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திகாமடுல்ல மாவட்டம் கல்முனை அல் அஸ்கர் மஹா வித்தியாலத்திற்கு அருகாமையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிஸின் ஆதரவாளர்கள், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது.
கண்காணிப்பு அமைப்பு
கல்முனையில் வன்முறைகள் இடம்பெறக்கூடும் என கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான ஓர் பின்னணியில் மூன்று குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.