வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் அவ் ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை 2024 நவம்பர் 9ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முன்னாள் போராளியான சசிகுமாரின் அனைத்து புனர்வாழ்வு ஆவணங்களையும் விசாரணைக்கு கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.