பாலநாதன் சதீசன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்றைய தினம் மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்றையதினம் புதுக்குடியிருப்பு தனியார் நேருந்து நிலைய வளாகத்தினுள் இடம்பெற இருக்கும் நிலையில்
இந்த கூட்டத்திற்கு சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றார்.
இந்நிலையில் பொதுகூட்டம் இடம்பெறவுள்ள பகுதியில் விசேட அதிரடி படையினரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மோப்பநாய் சகிதம் பொலிசாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்