பாராளுமன்ற தேர்தலில் பிரதான கட்சியொன்றில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனக்கான விருப்பு வாக்கை பெற்றுக்கொள்வதற்காக வாக்காளர்களின் குடிநீர், மின்சார கட்டணங்களுக்கான பணம் செலுத்துவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட காரியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மூதூர் தொகுதிக்குட்பட்ட தோப்பூர் பகுதி வாக்காளர்களின் விருப்பு வாக்கை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு, வாக்காளர்களின் கட்டணங்கள் செலுத்தப்படுவதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தேர்தல் முகாமைத்துவ அலகிற்குப் பொறுப்பான உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், மேலதிக மாவட்ட ஆணையாளருமான ஏ.சுதாகரன், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் தேவையான அறிவுறுத்தல்கள் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த வேட்பாளர் கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.