பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சில தரப்பினரால் கவலைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், திருத்தங்கள் அலல்லது மாற்றம் குறித்த தனது நிலைப்பாட்டை அரசாங்கம் மாற்றிக்கொள்ளவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தை புதிய பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ள நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்க வேண்டும்.
அமைச்சரவை மாநாட்டில் பேசிய அவர், சில ஊடகங்களால் தம்மை தவறாக மேற்கோள் காட்டி, இந்த விடயத்தை விளக்கியதாகவும், வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் கூறுவது போன்று அரசாங்கம் இவ்விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்தத் தருணத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்தவோ அல்லது இல்லாதொழிக்கவோ முடியாது என்றும், புதிய நாடாளுமன்றம் கூடடிய பின்னர் குறித்து சட்டம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.