தனது இல்லத்தை சோதனையிட்டமை அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தேசிய அமைப்பாளர் சுஜீவ சேனசிங்க, வலான ஊழல் தடுப்புப் பிரிவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
"இதை எனது உரிமை மீறல் மற்றும் அரசியல் பழிவாங்கும் செயலாக நான் கருதுவதால், அடிப்படை உரிமைகள் மீறல் மனு மற்றும் அவதூறு மனு ஒன்றை தாக்கல் செய்வேன்" என்று சேனசிங்க டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளை நான் விமர்சித்துள்ளேன் ஆனால் நேற்று நான் அனுபவித்தது போன்ற இருண்ட அனுபவங்களை நான் சந்தித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் தடுப்புப் பிரிவினர் தனது வீட்டில் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று அவர் கூறினார்.
"எனது வசிப்பிடத்திற்குள் நான் ஏதேனும் வாகனங்களை மறைத்து வைத்திருக்கிறேனா என்பதைக் கண்டுபிடிக்கவே அவர்கள் விரும்பியதாக நான் நினைக்கிறேன். நான் வாகனங்களை மறைக்க வேண்டியதில்லை, ஏனெனில் நான் வாகனங்களை வெளிப்படையாக வாங்குவதற்கு எனக்கு வழி உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டில் நேற்று காலை சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.