பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தனது வாக்குறுதியை - அர்ப்பணிப்பை மதிக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கான முயற்சிகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைவு கரிசனை வெளியிட்டுள்ளது. சட்டத்தரணிகள் ஒன்றிணைவு மேலும் தெரிவித்துள்ளதாவது, பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் தக்கவைக்கப்படும் என சுட்டிக்காட்டும் வகையிலான அறிக்கைகள் குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.
1979இல் நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச்சட்டம் பரந்துபட்ட அவசரநிலை போன்ற நிறைவேற்றதிகார அதிகாரங்களை கொண்ட ஆபத்தான சட்டம். ஆனால் இதனை சாதாரண தருணங்களிலும் பயன்படுத்தலாம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் விதிகள் கண்மூடித்தனமான கைதுகளில் இருந்து விடுதலை,சித்திரவதையிலிருந்து விடுதலை கருத்துச்சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறியுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதல் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளதால் ,சித்திரவதை,நீண்டகால தடுப்பு ,அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றால் பெரும் மனித துயரங்களை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் ஆயுதமாக ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது , தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் பொதுமக்களிற்கு எதிராக தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள நிலையில் பயன்படுத்தப்படுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள் நாட்டிற்கு வெளியிலிருந்து மாத்திரமல்லாமல் சர்வதேச சமூகத்திலிருந்தும் வெளியாகியுள்ளது, கடந்த சில வருடங்களில் அரசியல் கட்சிகளிடமிருந்து இதற்கு அதிகரித்த ஆதரவு காணப்படுகின்றது.
எனினும் தொடர்ந்து ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்ததும் அதனை தக்கவைத்துள்ளனர்.
2024 ஒக்டோபர் 29ம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் சட்டவிவகாரங்களிற்கான பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஜே.எம் விஜயபண்டார அரசாங்கத்தினை பிரதிநிதித்துவம் செய்து வெளியிட்ட கருத்தின்போது பிரச்சினை பயங்கரவாத தடைச்சட்டத்தில் இல்லை,மாறாக அது சிவில் சமூகத்தினர் பத்திரிகையாளர்களை ஏனையவர்களை தடுத்துவைப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது என தெரிவித்தார்.
அரசாங்கம் அவ்வாறு தவறாக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனுமதிக்காது மாறாக நம்பகதன்மை மிக்க புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே அதனை பயன்படுத்தும், அரசியல் பழிவாங்கலிற்காக அதனை பயன்படுத்தாது என குறிப்பிட்டிருந்தார்.
அதேநாளில் கருத்துவெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து விவாதிக்கப்படுகின்றது, புதிய நாடாளுமன்றத்திலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தினை மாற்றுவது குறித்து ஆராயமுடியும்,
2024 ஆகஸ்;ட் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய மக்கள் சக்தி பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அனைத்து ஒடுக்குமுறை சட்டங்களும் நீக்கப்படும்,நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களினதும் சிவில் உரிமைகள் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது.
தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அதற்கு முன்னரும் தேசிய மக்கள்சக்தி பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக அதிகார துஸ்பிரயோகத்திற்கு எதிராக குரல்கொடுத்ததுடன்,பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற ஏனைய ஒடுக்குமுறை சட்டங்களையும் எதிர்க்கின்றது.
சமீபத்தைய ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான ஆணையை வழங்கிய பின்னர் தேசிய மக்கள் சக்தியின் சமீபத்தைய அறிக்கைகள் மக்களின் ஆணையை குறைமதிப்பிடும் வகையில் அமைந்துள்ளமை குறித்து
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தனது உறுதிமொழியை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நிறைவேற்றவேண்டும்.அரசாங்கத்தின் சார்பில் அதன் அதிகாரி வெளியிட்ட அறிக்கை குறித்து எந்தவித தயக்கமின்றி தெளிவுபடுத்தவேண்டும்.பயங்கரவாத தடைச்சட்டத்தைநீக்குவது குறித்த தெளிவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டும்.
அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து தனது அர்ப்பணிப்பு குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இந்த தெளிவுபடுத்தலும் தலைமைத்துவமும் அவசியம்.