இன்று NPP PTAஐ நீக்க மாட்டோம் அல்லது சரியாக பயன்படுத்துவோம் என்ற விடயத்தை முன் வைத்துள்ளமை எம்மை முதுகில் குத்தும் செயல்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாம் ஊடக சந்திப்பை நடாத்தினோம்.
PTAஐ நீக்க வேண்டும் என்ற எமது தொடர் போராட்டத்தின் அடிப்படை அந்த அடக்குமுறைச் சட்டம் போராடும் மக்கள் மேல் மிக மோசமாக பயன்படுத்தப்படையே ஆகும்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எந்த வித வாய்ப்பும் வழங்காமல் தொடர்ச்சியாக தடுத்து வைப்பது ஓர் மிகப் பெரிய அடக்குமுறை.
தமிழ் அரசியல் கைதிகள் பலர் 20 ஆண்டுகள் வரை PTAயின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் குற்றமற்றவர்கள் என விடுதலையானார்கள்.
அவர்களின் வலிகளை நான் நேரில் கேட்டறிந்திருக்கிறேன்.
அரசின் மிக்க மோசமான அடக்குமுறை ஆயுதமாக இருக்கக் கூடிய இந்த சட்டத்தை நீக்க நாம் தொடர்ச்சியாக போராடி வருகின்றோம்.
கீழே இருக்கின்ற பல போராட்டங்களில் NPP தோழர்களும் கலந்து கொண்டார்கள். இன்று அதிகாரத்துக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மறக்கலாம் ஆனால் நாம் மறக்க மாட்டோம்.
மிகுதியாக இருக்கின்ற 10 அரசியல் கைதிகளும் புதிதாக PTAயின் கீழ் கைது செய்யப்பட்ட ஏனையோரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
அத்துடன் PTA உடனடியாக நீக்கப்பட வேண்டும்.